பிரதமர் மோடி சிறந்த நபர்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பாராட்டு

September 8, 2022

  பிரதமர் மோடி சிறந்த மனிதர். அவர் தலைமையில் இந்தியா சிறப்பாக இருக்கிறது. அவர் எனது நல்ல நண்பரும் கூட என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மோடிக்கு பாராட்டுகளைக் குவித்துள்ளார். முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், "நான் அமெரிக்க அதிபராக இருந்தபோது இந்தியாவுடன் நல்லுறவைப் பேணினேன். பிரதமர் மோடி சிறந்த நபர். அவர் முன் நிறைய சவால்கள் இருந்தும், அவர் இந்தியாவை சிறப்பாக வழிநடத்துகிறார். இன்றும் அவர் எனக்கு சிறந்த […]

 

பிரதமர் மோடி சிறந்த மனிதர். அவர் தலைமையில் இந்தியா சிறப்பாக இருக்கிறது. அவர் எனது நல்ல நண்பரும் கூட என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மோடிக்கு பாராட்டுகளைக் குவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், "நான் அமெரிக்க அதிபராக இருந்தபோது இந்தியாவுடன் நல்லுறவைப் பேணினேன். பிரதமர் மோடி சிறந்த நபர். அவர் முன் நிறைய சவால்கள் இருந்தும், அவர் இந்தியாவை சிறப்பாக வழிநடத்துகிறார். இன்றும் அவர் எனக்கு சிறந்த நண்பர் தான். இந்தியாவுக்கு என்னைவிட்ட சிறந்த நண்பர் இருந்ததே இல்லை" என்றார்.

கடந்த 2019 செப்டம்பரில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் நடந்த ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிட்டியது. இதனை சுட்டிக்காட்டிய ட்ரம்ப், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடியைப் போல் தனக்கும் நல்ல ஆதரவு இருக்கிறது என்று கூறினார்.


0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu