பிரதமர் மோடி ஐந்தாவது முறையாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கர்நாடகாவிற்கு வருகை தருகிறார்.
கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதன் முதல் கட்ட தேர்தல் 14 தொகுதிகளுக்கு நாளை நடைபெறுகிறது. இரண்டாவது கட்டத் தேர்தல் மே 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து கர்நாடகாவில் பாஜாக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே நான்கு முறை பிரச்சாரம் செய்து வந்தார். தற்போது ஐந்தாவது முறையாக மீண்டும் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்வதற்காக 28ஆம் தேதி கர்நாடகா வருகை தர உள்ளார்.