பிரதமர் மோடி இன்று தூத்துக்குடியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதில் பல்லடம் மதுரை உள்ள இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பின்னர் மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். அதனை தொடர்ந்து இன்று காலை தூத்துக்குடி சென்றார். அங்கு நாட்டில் முடிவற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அதில் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டினார். இவை தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டு மொத்தம் ரூபாய் 17300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தூத்துக்குடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக செங்கோல் வழங்கப்பட்டுள்ளது.