கொச்சி நீர்வழி மெட்ரோ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடி திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியம் சென்றார். அங்கு கொச்சி மெட்ரோ படகு சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கேரள டிஜிட்டல் பல்கலைக்கழகம், பாலக்காடு ரெயில்வே கோட்டத்தில் நிறைவேற்றப்படும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்த கொச்சி மெட்ரோ படகுகளில் நாளை முதல் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த படகுகளில் செல்ல குறைந்தபட்சம் ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.