இந்திய பிரதமர் மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகருக்கு இன்று காலை வருகை தந்துள்ளார்.
அவரை இந்திய தூதரான சுரேஷ் ரெட்டி மற்றும் குழுவினர் வரவேற்றனர். தொடர்ந்து, இந்திய வம்சாவளி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரியோவில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை உச்சரித்து சிறப்பாக வரவேற்றனர். மேலும் குஜராத் பாரம்பரிய ஆடைகளை அணிந்த இந்திய பெண்கள் தாண்டியா நடனம் ஆடினர். பிரதமர் மோடி இந்திய வம்சாவளி மக்கள் இடையில் கலந்து கொண்டு சிறுவர்களுடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டார். இன்றும் நாளையும், ரியோ டி ஜெனீரோவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் மோடி உட்பட 20 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் அதில் கலந்துகொள்வார்கள்.














