ஜப்பான், சீனா பயணத்தை முடித்து இன்று தாய்நாட்டிற்கு திரும்பிய பிரதமர் மோடி

September 1, 2025

ஜப்பானில் இருநாட்டு உச்சிமாநாடு, சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் மற்றும் சீனாவுக்கு 4 நாள் பயணமாக ஆகஸ்ட் 28 அன்று டெல்லியில் இருந்து புறப்பட்டார். முதலில் ஜப்பான் சென்ற அவர், தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 15வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்றார். அப்போது ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். 2 நாள் பயணத்தை முடித்து, மோடி சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் […]

ஜப்பானில் இருநாட்டு உச்சிமாநாடு, சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் மற்றும் சீனாவுக்கு 4 நாள் பயணமாக ஆகஸ்ட் 28 அன்று டெல்லியில் இருந்து புறப்பட்டார். முதலில் ஜப்பான் சென்ற அவர், தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 15வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்றார். அப்போது ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். 2 நாள் பயணத்தை முடித்து, மோடி சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்களுடன் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசித்தார். பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இன்று இரவு 7.45 மணிக்கு டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவருக்கு உளர்ந்த வரவேற்பு அளித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu