அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கான அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
இந்த பயணத்தின் மூலம் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசியின் சிறப்பு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் அந்த நாட்டு தலைநகர் கெய்ரோவுக்கு சென்றார். இரு நாடுகளின் வர்த்தக உறவு வலுவடையும் வகையில் இந்த பயணத்தின் போது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கான அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்