கர்நாடகாவில் தேர்தலையொட்டி பிரதமர் மோடி 10 நாட்கள் பிரசாரம் 

April 19, 2023

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி 10 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி 7 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்து பலவேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி […]

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி 10 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி 7 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்து பலவேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி வருகிற மே 1-ந் தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 10 நாட்கள் இங்கு பிரசாரம் செய்யும் அவர், சுமார் 30 பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பார் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu