பிரதமர் மோடி நாளை பீகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைப்பதற்காக பீகார் செல்கிறார்.
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பின் இன்று வாரானாசி சென்ற நிலையில் நாளை பீகார் மாநிலத்திற்கு செல்கிறார். அங்கு ராஜ் கிர் பகுதியில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த வளகமானது இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பில் உருவாகியுள்ளது. இதன் திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதர்கள் உட்பட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர் மேலும் இது இரண்டு பிரிவுகளுடன் கூடிய 1200 இருக்கை வசதியுடன், 40 வகுப்பறைகளும், தலா 300 இருக்கைகளுடன் இரு கலை அரங்கங்ககளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று விடுதி, சர்வதேச மையம், திறந்தவெளி அரங்கம், ஆசிரியர் மன்றம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சூரிய மின்உற்பத்தி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் மறுசுழற்சி நிலையம் உள்ளிட்ட அனைத்துமே சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகளுடன் 100% பசுமை வளாகமாக அமைக்கப்பட்டுள்ளது