பிரதமர் மோடி அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார்.
பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா பயணங்களை மேற்கொண்டார். கடந்த புதன்கிழமை, பிரான்ஸ் பயணத்தை முடித்த பிறகு, அவர் அமெரிக்கா சென்றார், அங்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ சந்தித்தார். அதற்கு முன்பு, உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மற்றும் தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோரைச் சந்தித்தார்.
அமெரிக்க பயணத்தின் போது, பிரதமர் மோடி அதிபர் டிரம்புடன் வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்தியா-அமெரிக்கா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரு நாடுகளும் ஒருங்கிணைந்த முறையில் பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடின.பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், டிரம்புடன் "சிறந்த" சந்திப்பை மேற்கொண்டதாக குறிப்பிட்டார். மேலும், அவர்கள் பேச்சுவார்த்தை இந்திய-அமெரிக்க நட்புறவுக்கு புதிய ஊக்கம் அளிக்கும் என்றும் தெரிவித்தார்.இந்நிலையில், அமெரிக்கா, இந்தியாவுக்கு F-35 போர் விமானங்களை வழங்குவதற்கான முயற்சியில் உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.