தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 2 நாள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் செல்கிறார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு துபாய், அபுதாபி நாடுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றது. அப்போது 6 தொழில் நிறுவனங்களுடன் ரூ.6 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் 2 நாள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொழில் துறை அதிகாரிகளுடன் சிங்கப்பூர் செல்ல இருக்கிறார். அங்கு 24-ந்தேதி நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த மாநாட்டில், சிங்கப்பூர் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது.