பிரதமர் விஷ்வ கர்மா திட்டம் - 1.40 லட்சம் விண்ணப்பங்கள்

September 28, 2023

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மக்களுக்காக பிரதமர் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது. சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விஸ்வகர்மா சகோதர, சகோதரிகளின் விரிவான வளர்ச்சிக்கு பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் ஒரு மைல்கல்லாக இருக்கும். இது அவர்களின் இழந்த அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பயிற்சி கருவிகள் மற்றும் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்படும். இதில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதி உடையவர்கள் பலன் அடைவார்கள். இதனால் 18 வகையான கைவினை கலைஞர்கள் […]

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மக்களுக்காக பிரதமர் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது.
சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விஸ்வகர்மா சகோதர, சகோதரிகளின் விரிவான வளர்ச்சிக்கு பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் ஒரு மைல்கல்லாக இருக்கும். இது அவர்களின் இழந்த அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பயிற்சி கருவிகள் மற்றும் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்படும். இதில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதி உடையவர்கள் பலன் அடைவார்கள். இதனால் 18 வகையான கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் பலனடைவார்கள். மேலும் பயிற்சியின் போது 500 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். கருவிகள் வாங்க 15,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இவர்கள் மூன்று லட்சம் வரை பிணையில்லா கடன் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இந்த திட்டம் தொடங்கி 10 நாட்களுக்குள் இதுவரை 1.40 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் நாராயணன் ரானே தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu