நாளை 75,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர்

October 21, 2022

அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மெகா வேலை வாய்ப்பு மேளாவை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இது குறித்து பிரதமர் அலுவலகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக மெகா வேலை வாய்ப்பு மேளாவை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். இதன் தொடக்க விழாவில் 75,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பணி […]

அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மெகா வேலை வாய்ப்பு மேளாவை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக மெகா வேலை வாய்ப்பு மேளாவை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். இதன் தொடக்க விழாவில் 75,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்க உள்ளார்.

மத்திய ஆயுதப்படை பணியாளர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், எல்.டி.சி., ஸ்டெனோ, பி.ஏ., வருமான வரி ஆய்வாளர்கள் மற்றும் எம்.டி.எஸ். உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு இந்த விழாவில் பணிநியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன. அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் தாங்களாகவோ அல்லது யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி மற்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாகவோ இந்த வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது பிரதமரின் இலக்கு. அந்த மாபெரும் இலக்கை எட்ட தேவையான நடவடிக்கைகளை பல்வேறு அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்கள் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதில் பிரதமரின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக இந்த நிகழ்வு அமையும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu