அமேசான் பிரைம் வீடியோவின் ஆசிய பசிபிக் துணை வேந்தராக கவுரவ் காந்தி அறிவிப்பு

February 8, 2023

ஸ்ட்ரீமிங் தளங்களில் அமேசான் பிரைம் வீடியோ முன்னணியில் உள்ளது. இந்நிலையில், இந்த தளத்தின் உயர் பதவி அதிகாரங்களில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆசிய பசிபிக் பிரிவின் துணைவேந்தராக கவுரவ் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், சந்தாதாரர் வீடியோக்கள் பிரிவுக்கான நிர்வாகியாக இருந்த சுஷாந்த் ஸ்ரீராம், இனிமேல் அமேசான் பிரைம் வீடியோவின் இந்தியப் பிரிவு தலைவராக உயர்த்தப்படுகிறார். கவுரவ் காந்தி, தற்போது சிங்கப்பூர் அலுவலகத்தில் இருந்து செயல்படுகிறார். இனிமேல், சிங்கப்பூரைத் தாண்டி, ஜப்பான், தென்கிழக்கு […]

ஸ்ட்ரீமிங் தளங்களில் அமேசான் பிரைம் வீடியோ முன்னணியில் உள்ளது. இந்நிலையில், இந்த தளத்தின் உயர் பதவி அதிகாரங்களில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆசிய பசிபிக் பிரிவின் துணைவேந்தராக கவுரவ் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், சந்தாதாரர் வீடியோக்கள் பிரிவுக்கான நிர்வாகியாக இருந்த சுஷாந்த் ஸ்ரீராம், இனிமேல் அமேசான் பிரைம் வீடியோவின் இந்தியப் பிரிவு தலைவராக உயர்த்தப்படுகிறார்.

கவுரவ் காந்தி, தற்போது சிங்கப்பூர் அலுவலகத்தில் இருந்து செயல்படுகிறார். இனிமேல், சிங்கப்பூரைத் தாண்டி, ஜப்பான், தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாடுகளின் அலுவல்களையும் மேற்கொள்வார் என கூறப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் இவரது புதிய பதவி அதிகாரத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், அமேசானுக்கு முன்னதாக, வயாகாம் 18, என்டிடிவி, ஸ்டார் இந்தியா போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், சுஷாந்த் ஸ்ரீராம், அமேசானுக்கு முன்னதாக, ஷாவ்மி இந்தியா நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu