கடந்த 2022ஆம் ஆண்டு பிரைம் வாலிபால் லீக் போட்டி ஹைதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பிரைம் வாலிபால் ஐதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 7 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் கொல்கத்தா தண்டர்புல் சாம்பியன் பட்டம் வென்றது.பின்னர் கடந்தாண்டு பெங்களூர், ஹைதராபாத், கொச்சி ஆகிய இடங்களில் 8 அணிகளை கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் கடந்த ஆண்டு அகமதாபாத் டிபெண்டேர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் மூன்றாவது முறையாக பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் அகமதாபாத் டிபெண்டர்ஸ், பெங்களூர்
டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ப்ளிட்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி ப்ளூ ஸ்பைக்கேர், கோல்கட்டா தண்டர் போல்ட்,மும்பை மீட்டி யார்ஷ் மற்றும் புதிதாக இணைந்துள்ள டெல்லி டூபான்ஸ் ஆகிய ஒன்பது அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த விளையாட்டானது சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.














