பிரைம் வாலிபால் லீக் மூன்றாவது சீசன் தொடக்கம்

பிரைம் வாலிபால் லீக் ஆட்டத்தின் மூன்றாவது சீசன் போட்டிகள் நேற்று தொடங்கியுள்ளது. பிரைம் வாலிபால் லீக் ஆட்டத்தின் மூன்றாவது சீசன் போட்டிகள் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியானது வரும் மார்ச் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் அகமதாபாத் டிபெண்டர்ஸ், பெங்களூரு டார்படாஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹா, கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர்போல்ட், மும்பை மீடியேட்டர் அணிகளுடன் அறிமுக அணியாக டெல்லி டூபான்ஸ் […]

பிரைம் வாலிபால் லீக் ஆட்டத்தின் மூன்றாவது சீசன் போட்டிகள் நேற்று தொடங்கியுள்ளது.
பிரைம் வாலிபால் லீக் ஆட்டத்தின் மூன்றாவது சீசன் போட்டிகள் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியானது வரும் மார்ச் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் அகமதாபாத் டிபெண்டர்ஸ், பெங்களூரு டார்படாஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹா, கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர்போல்ட், மும்பை மீடியேட்டர் அணிகளுடன் அறிமுக அணியாக டெல்லி டூபான்ஸ் அணி விளையாட உள்ளது.
இதில் கலந்து கொள்ள உள்ள ஒன்பது அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும் முடிவில் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 5 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 5 சுற்று மார்ச் 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சூப்பர் 5 சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். இரண்டாவது, மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிகள் நுழையும். இதனைத் தொடர்ந்து இதன் இறுதிப் போட்டியானது மார்ச் 21ஆம் தேதி நடைபெறும்.
இந்த லீக் சுற்று போட்டியில் மொத்தமாக 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu