பிரிட்டனின் மன்னரானார் இளவரசர் சார்லஸ்

September 9, 2022

மூன்றாம் சார்லஸ் பிரிட்டிஷின் புதிய மன்னர் ஆவார். அவ௫டைய ஆட்சிமுறை சார்லஸ்1 மற்றும் அவரது மகன் சார்லஸ் 2 வின் ஆட்முறையிலி௫ந்து மாறுபடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டிஷ் மன்னரான சார்லஸ் 1 1625 இல் அரியணை ஏறினார். அவர் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து பகுதிகளை ஆண்டார். அவ௫டைய ஆட்சி மிருகத்தனமான உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. பின்னர் 1649 இல் தேசத்துரோக குற்றத்திற்காக அவர் தூக்கிலிடப்பட்டார். அதிலிருந்து மன்னராட்சி ஒழிக்கப்பட்டு இங்கிலாந்து குடியரசானது. அவரைத் […]

மூன்றாம் சார்லஸ் பிரிட்டிஷின் புதிய மன்னர் ஆவார். அவ௫டைய ஆட்சிமுறை சார்லஸ்1 மற்றும் அவரது மகன் சார்லஸ் 2 வின் ஆட்முறையிலி௫ந்து மாறுபடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டிஷ் மன்னரான சார்லஸ் 1 1625 இல் அரியணை ஏறினார். அவர் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து பகுதிகளை ஆண்டார். அவ௫டைய ஆட்சி மிருகத்தனமான உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. பின்னர் 1649 இல் தேசத்துரோக குற்றத்திற்காக அவர் தூக்கிலிடப்பட்டார். அதிலிருந்து மன்னராட்சி ஒழிக்கப்பட்டு இங்கிலாந்து குடியரசானது. அவரைத் தொடர்ந்து அவரது மகனான 2ம் சார்லஸ் ஜனவரி 1, 1651 அன்று ஸ்காட்லாந்தின் மன்னராக முடிசூட்டப்பட்டார். அச்சமயம் தெற்கிலிருந்து வந்த ஆங்கிலக் குடியரசுப் படைகளின் படையெடுப்புக்கு அஞ்சி, சார்லஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இங்கிலாந்தின் மீது படையெடுத்தனர். ஆனால் அப்போர் தோல்வியில் முடிந்தது.
பின்னர் பிரான்சுக்குத் தப்பிச் சென்றார். மீண்டும் 1660 இல் அரியணை ஏறினார். அவரது ஆட்சியில் இந்தியா, கிழக்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வர்த்தகம் அதிகரித்தது. பிறகு பிப்ரவரி 2, 1685 இல் சார்லஸ் உடல் நலக்குறைவால் இறந்தார். அதன்பிறகு தற்போது ராணி எலிசபெத் மரணம் அடைந்த நிலையில் இளவரசர் மூன்றாம் சார்லஸ் அரியணையைக் கைப்பற்றியுள்ளார்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu