நைஜீரியாவில் வெள்ளத்தால் 200 சிறை கைதிகள் தப்பி ஓட்டம்

September 16, 2024

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் பெய்த தொடர்ச்சியான கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஒரு சிறைச்சாலையின் சுவர்கள் இடிந்து விழுந்து 274 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்படும் போது 281 கைதிகள் தப்பியோடியதாகவும், இதில் 7 பேர் மீட்கப்பட்டதாகவும் நைஜீரிய சீர்திருத்த சேவையின் செய்தித் தொடர்பாளர் அபுபக்கர் உமர் தெரிவித்துள்ளார். தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க அதிகாரிகள் அவர்களது உடல் அமைப்பு சார்ந்த தகவல்களை பயன்படுத்தி தீவிர தேடுதல் […]

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் பெய்த தொடர்ச்சியான கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஒரு சிறைச்சாலையின் சுவர்கள் இடிந்து விழுந்து 274 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்படும் போது 281 கைதிகள் தப்பியோடியதாகவும், இதில் 7 பேர் மீட்கப்பட்டதாகவும் நைஜீரிய சீர்திருத்த சேவையின் செய்தித் தொடர்பாளர் அபுபக்கர் உமர் தெரிவித்துள்ளார். தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க அதிகாரிகள் அவர்களது உடல் அமைப்பு சார்ந்த தகவல்களை பயன்படுத்தி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நைஜீரியாவில் பல வாரங்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 229 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 386,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வடக்கு நைஜீரியா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பல விலங்குகள் தங்களது வாழிடத்தை இழந்து அருகிலுள்ள மனித குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளன. பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஆப்பிரிக்கா முழுவதும் கனமழை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu