தமிழக அரசு சிறை கைதிகள் இனி குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சிறைவாசிகள் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து திருந்துவதற்காகவும், குற்றங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காகவும் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர் ஆகியோர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். தற்போது தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள வழங்கப்பட்டுள்ள தொலைபேசி வசதி மூன்று நாட்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு பத்து முறை, ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு வீடியோ தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














