ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு, அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்ட ஆப்கன் கைதி கான் முகமது விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியதாக இன்று அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்பு, 2021 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி அமைந்தது. டிரம்பின் காலத்தில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தம் நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கலிஃபோர்னியாவில் ஆயுள் தண்டனையை அனுபவித்த முகமது கான், தலிபானுக்கு ஈடாக பரிமாறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கைதிகளின் பரிமாற்றம் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் சிறந்த உதாரணமாக கருதப்படுகிறது. கத்தார் நாட்டின் பங்கு மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஆப்கன் அரசு பாராட்டியுள்ளது.














