சிறப்பு ரயிலில் செல்வதற்கு தனியார் நிறுவனம் அதிக பணம் வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்கள் உள்ள நிலையில் சிறப்பு ரயில்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுள்ளது. இதுவரை வழக்கமாக இயக்கப்படும் கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரம் எர்ணாகுளத்திற்கு 9 முதல் 13ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் பிரீமியம் கட்டணத்தில் இயக்கப்படும் என தனியார் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அனுமதி பெறுவதற்கு முன்பாகவே டிக்கெட் விற்பனையை தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் வெளியிட்டுள்ள டிக்கெட் கட்டணம் பயணிகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதில் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு மூன்று அடுக்கு ஏசி படுக்கைக்கு ரூபாய் 2000, இரண்டாம் வகுப்பு படுக்கைக்கு ரூபாய் 3000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.














