சென்னையில் தனியார் பேருந்துகளில் முதியோர்களுக்கான சலுகைகள் தொடரும்- அமைச்சர் சிவசங்கர்

சென்னையில் தனியார் பேருந்துகளில் மாணவர்கள், மகளிர், முதியோர்களுக்கான சலுகைகள் தொடரும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் பேருந்துகள் குறித்து போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், சென்னையில் அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்த சாதக பாதகங்களை ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கும். மக்கள் தொகையின் அடிப்படையில் கூடுதல் வசதிகளை அளிப்பதற்கு தான் இந்த திட்டங்கள் கொண்டுவரப்படுகிறது. எனவே பேருந்து தனியார் மயமாவது என்ற பேச்சுக்கே இடமில்லை. […]

சென்னையில் தனியார் பேருந்துகளில் மாணவர்கள், மகளிர், முதியோர்களுக்கான சலுகைகள் தொடரும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் பேருந்துகள் குறித்து போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், சென்னையில் அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்த சாதக பாதகங்களை ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கும். மக்கள் தொகையின் அடிப்படையில் கூடுதல் வசதிகளை அளிப்பதற்கு தான் இந்த திட்டங்கள் கொண்டுவரப்படுகிறது. எனவே பேருந்து தனியார் மயமாவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கைவிடவேண்டும். ஏற்கெனவே இயக்கப்பட்டுவரும் வழித்தடத்தில் பேருந்துகள் நிறுத்தப்படாது. இதில் பணியாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.

சென்னையில் தனியார் பேருந்துகளில் மாணவர்கள், மகளிர், முதியோர்களுக்கான சலுகைகள் தொடரும். பெண்களுக்கான இலவச போக்குவரத்து திட்டம் தொடர்ந்து செய்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu