பிரியங்கா காந்தி, வயநாடு தொகுதியில் எதிர்வரும் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்க தயாராக உள்ளார்.
மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி கேரளத்தில் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ரேபரேலியில் எம்.பி. பதவியை ஏற்றுக்கொண்டார், ஆனால் வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தார், இதனால் அங்கு நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுகின்றன. மேலும் காங்கிரஸ் கட்சியால் பிரியங்கா காந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதற்காக நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். மேலும் விரைவில் பிரசாரத்தை அங்கு தொடங்க உள்ளார். ராகுல் காந்தி பிரசாரத்தில் பங்கேற்க இருப்பதால், கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.