புனேரி பால்டன்ஸ் மற்றும் உ.பி. யோதாஸ் அணி புரோ கபடி லீக்கில் வெற்றி
11-வது புரோ கபடி லீக் தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் உத்தர பிரதேசம் நொய்டாவில் நடைபெற்றன. இதில், புனேரி பால்டன்ஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை 51-34 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.மற்றொரு ஆட்டத்தில், உ.பி. யோதாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை 44-42 என்ற புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி, திரில் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், புனேரி பால்டன்ஸ் அணி, புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.