புரோ கபடி லீக் ஆட்டத்தில் அரியானா மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் வெற்றி பெற்றன.
11-வது புரோ கபடி லீக் தொடர் 2023 அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. தற்போது, மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகின்றன. முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. தமிழ் தலைவாஸ் 42-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூருவை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில், அரியானா ஸ்டீலர்ஸ் அணி 47-30 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வென்றது.