புரோ கபடி லீக் தொடரில் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் புனேரி பால்டன் வெற்றி பெற்றன.
11-வது புரோ கபடி லீக் தொடரில் இன்று இரவு அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. அரியானா அணி 42-30 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தி வெற்றியடைந்தது. இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள அரியானா அணி 12 வெற்றி, 3 தோல்வி என 61 புள்ளிகளுடன் முதலிடத்தில் நிலைத்துள்ளது. மற்றொரு போட்டியில், புனேரி பால்டன் அணி 34-33 என குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் நிலைத்துள்ளது.