புரோ கபடி லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின.
இந்தியாவில் நடைபெறும் 11-வது புரோ கபடி லீக் போட்டியில், இன்று முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின. தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அணி அசத்தலான ஆட்டத்தில் இறங்கியது. இறுதியில், தமிழ் தலைவாஸ் 35-30 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது, இது அவர்களின் இரண்டாவது வெற்றி ஆகும். மற்றொரு போட்டியில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 33-27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி யு மும்பா அணி வெற்றி பெற்றது.