ப்ரோ கபடி லீக்கின் பிளே ஆப் சுற்றுகள் நாளை தொடங்குகிறது.
ப்ரோ கபடி லீக் பத்தாவது தொடர் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 12 அணிகளுடன் தொடங்கிய இந்த லீக் ஆட்டங்கள் கடந்த 21 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில் புனேரி பல்தாண், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர், தபாங் டெல்லி, குஜராத் ஜெயின்ஸ், அரியானா ஸ்டிகேர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் முதல் ஆறு இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதில் புனே மற்றும் ஜெய்ப்பூர் அணி நேரடியாக அரையிறுதி சுற்றில் விளையாட உள்ளது. நாளை இரவு எட்டு மணிக்கு நடைபெறும் முதல் எலிமினேட்டர் ஆட்டத்தில் டெல்லி மற்றும் பாட்னா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி புனே அணியுடன் மோத உள்ளன. இரண்டாவது எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் மற்றும் அரியானா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஜெய்ப்பூர் அணியுடன் விளையாட உள்ளன. இதன் இறுதிப்போட்டி மார்ச் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.














