நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவான போராட்டம்

நேபாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவிற்கு அபராதம் மற்றும் பாதுகாப்பு குறைப்பு. நேபாளத்தில் 2007-ம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, 2008-ம் ஆண்டு குடியரசு அமைந்த பின்னர், முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா கடந்த பிப்ரவரி 19-ம் தேதி குடியரசு தினத்தன்று, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து, மன்னராட்சியை மீட்டெடுக்குமாறு கோரியிருந்தார். இதன் பின்னர், அவரது ஆதரவாளர்கள் மன்னராட்சியை மீண்டும் கொண்டு வர போராட்டங்களை நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 110 பேர் காயமடைந்தனர். 100-க்கும் […]

நேபாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவிற்கு அபராதம் மற்றும் பாதுகாப்பு குறைப்பு.

நேபாளத்தில் 2007-ம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, 2008-ம் ஆண்டு குடியரசு அமைந்த பின்னர், முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா கடந்த பிப்ரவரி 19-ம் தேதி குடியரசு தினத்தன்று, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து, மன்னராட்சியை மீட்டெடுக்குமாறு கோரியிருந்தார். இதன் பின்னர், அவரது ஆதரவாளர்கள் மன்னராட்சியை மீண்டும் கொண்டு வர போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்த போராட்டத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 110 பேர் காயமடைந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால், காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு ரூ.7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்திய இந்த போராட்டங்கள் தொடர்பாக, நேபாள அரசு ஞானேந்திராவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், அவரது வீட்டிற்கான பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu