இங்கிலாந்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் காயமடைந்தனர்.
கடந்த சனியன்று லண்டனின் மத்திய பகுதியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணி சென்றது. அதில் முப்பதாயிரம் பேர் வரை பங்கேற்றனர். அப்போது பேரணியில் பங்கேற்றவர்கள் போர் நிறுத்த வாசக அட்டைகளை கையில் ஏந்தி இருந்தனர். பாலஸ்தீன கொடிகளுடன், இஸ்ரேல் எதிர்ப்பு வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. அதோடு இங்கிலாந்து அரசு இஸ்ரேலை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த பேரணிக்கு பாதுகாப்புக்காக சுமார் 1300 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், பேரணியில் பங்கேற்ற சிலர் காவல்துறையினர் மீது பட்டாசுகளை கொளுத்தி வீசினர். இதனால் அங்கு பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில் நான்கு போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது பயங்கரவாத ஆதரவு கோஷங்கள் எழுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து லண்டன் காவல்துறை கூறுகையில், பேரணியில் கலந்து கொண்டவர்கள் போலீசார் மீது வன்முறையை கட்டவிழ்த்து உள்ளனர். இதுபோன்ற வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேரணி நடத்துவது முற்றிலும் தவறானது. இதனால் பலருடைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த வார இறுதியில் இதே போன்ற போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். லண்டன் நகரின் அமைதியை சீர்குலைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் அனுமதிக்க முடியாது என்று.