சென்னை ஐசிஎஃப் உள்ளிட்ட 3 ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலைகளில் 6,991 ரயில் பெட்டிகளைத் தயாரிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை ஐசிஎஃப், கபுர்தலா ரயில் பெட்டித் தொழிற்சாலை உள்ளிட்ட 3 தொழிற்சாலைகளில் 2024-25-ம் நிதியாண்டில் 6,991 ரயில் பெட்டிகளைத் தயாரிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் 3,619 பெட்டிகள், கபுர்தலா ரயில் பெட்டித் தொழிற்சாலையில் 1,850 பெட்டிகள், ரேபரேலி நவீன ரயில் பெட்டித் தொழிற்சாலையில் 1,522 பெட்டிகள் என மொத்தம் 6,991 பெட்டிகள் தயாரிக்க வேண்டும். எல்எச்பி வகையான பிரிவுகளில் 3,902 பெட்டிகளும், வந்தே பாரத்ரயில்களுக்காக 1,008 பெட்டிகளும் தயாரிக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.