'எலக்ட்ரானிக்ஸ்' பொருட்கள் உற்பத்தி ரூ. 8.42 லட்சம் கோடியாக உயரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகளாவிய ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு கடந்த ஆண்டில் 1.2 சதவீதமாக இருந்தது. நடப்பு ஆண்டில் 1.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. உள்நாட்டு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 8.42 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே, முந்தைய நிதியாண்டில் 6.40 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
வரும் 2025 - 26 நிதியாண்டில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியை 24.90 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் கர்நாடகா மாநிலம் முன்னணியில் உள்ளது. இம்மாநிலத்தின் ஏற்றுமதி 3.22 லட்சம் கோடி ரூபாயாகவும், இதையடுத்து உத்தர பிரதேசத்தின் ஏற்றுமதி 3.13 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.