நவீன தொழில்நுட்பத்தில் மாசில்லாமல் தாமிரம் உற்பத்தி

September 16, 2022

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாசில்லாமல் தாமிரம் உற்பத்தி செய்ய அனுமதி தர வேண்டும் என்று ‘மேக் ’ இந்தியா நிறுவன தலைவர் வலியுறுத்தியுள்ளார். ‘மேக் ’ இந்தியா நிறுவனத்தின் தலைவரும், மனுநீதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான மாணிக்கம் கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டதால் தாமிரம் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. 2018-ல் இந்தியா தாமிரம் ஏற்றுமதி செய்து வந்தது. இன்று 6 லட்சம் டன் தாமிரம் இறக்குமதி […]

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாசில்லாமல் தாமிரம் உற்பத்தி செய்ய அனுமதி தர வேண்டும் என்று ‘மேக் ’ இந்தியா நிறுவன தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

‘மேக் ’ இந்தியா நிறுவனத்தின் தலைவரும், மனுநீதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான மாணிக்கம் கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டதால் தாமிரம் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. 2018-ல் இந்தியா தாமிரம் ஏற்றுமதி செய்து வந்தது. இன்று 6 லட்சம் டன் தாமிரம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு தாமிரம் ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.750-ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. தாமிரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காற்றாலை, சூரியஒளி மின்உற்பத்தி, மின்சார வாகனம், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி போன்றவற்றிற்கு தாமிரம் மிக அவசியமான ஒன்றாக உள்ளது.

தாமிரம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யும் எந்த நிறுவனமும் மாசு பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்படக் கூடாது. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாசு இல்லாமல் தாமிரம் தயாரிக்க முடியும். எனவே, ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் தாமிர உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து நம் நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu