அரசியல் பிரச்சாரங்களில் குழந்தைகள் பயன்படுத்த தடை

February 6, 2024

தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களின் போது குழந்தைகளை பயன்படுத்த தடை உத்தரவிட்டுள்ளது. அரசியல் பிரச்சார மேடைகளில் குழந்தைகளை பேச வைப்பது, முழக்கமிட வைப்பது, பிரசுரங்கள் விநியோகிக்க வைப்பது உட்பட்ட எந்தவித செயல்களிலும் குழந்தைகளை ஈடுபட வைக்க கூடாது. மேலும் பிரச்சாரத்தில் எவ்வகையிலும் குழந்தைகள் பயன்படுத்தக் கூடாது. பாராளுமன்ற தேர்தலின் போது குழந்தைகள் பயன்படுத்துவதை அரசியல் கட்சிகள் முழுமையாக தவிர்க்க வேண்டும். இதனை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் சட்டங்கள் […]

தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களின் போது குழந்தைகளை பயன்படுத்த தடை உத்தரவிட்டுள்ளது.

அரசியல் பிரச்சார மேடைகளில் குழந்தைகளை பேச வைப்பது, முழக்கமிட வைப்பது, பிரசுரங்கள் விநியோகிக்க வைப்பது உட்பட்ட எந்தவித செயல்களிலும் குழந்தைகளை ஈடுபட வைக்க கூடாது. மேலும் பிரச்சாரத்தில் எவ்வகையிலும் குழந்தைகள் பயன்படுத்தக் கூடாது. பாராளுமன்ற தேர்தலின் போது குழந்தைகள் பயன்படுத்துவதை அரசியல் கட்சிகள் முழுமையாக தவிர்க்க வேண்டும். இதனை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் சட்டங்கள் மற்றும் தேர்தல் வழிகாட்டலுடன் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu