வணிகவரித் துறையில் ஒரேநேரத்தில் 1,000 உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் வணிகவரித் துறையில் 1,000 உதவியாளர் பணியிடங்கள், 840 துணை வணிகவரி பணியிடங்களாகவும், 160 வணிகவரி அலுவலர் பணியிடங்களாகவும் தரம் உயர்த்தப்படும் என்று 2021-22 நிதி ஆண்டில் சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அறிவித்தார். அதை நடைமுறைப்படுத்தும் வகையில் 1,000 உதவியாளர் பணியிடங்களை தரம் உயர்த்துவது தொடர்பான கருத்துருவை அரசுக்கு வணிகவரி ஆணையர் அனுப்பியிருந்தார். வணிகவரி ஆணையரின் கருத்துருவை அரசு ஆய்வு செய்து 1,000 உதவியாளர் பணியிடங்களை தரம் உயர்த்தி ஆணையிடுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.