சென்னையில் சொத்துக்களின் விலை 20 சதவீதம் உயர்கிறது

February 9, 2023

சென்னையில் சொத்துக்களின் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. நவீன தொழில்நுட்ப காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் லட்சம் முதல் பல கோடி வரையில் சாதாரணமாக விலைக்கு கிடைக்கின்றன. கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள கட்டுமானர்கள் ஆயிரக்கணக்கான வீடுகளை வானளவில் கட்டி விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கட்டுமான தொழில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு வரை நிலையாக இருந்த நிலையில் தற்போது கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கட்டுமான மூலப்பொருட்களின் விலை அனைத்தும் பல மடங்கு உயர்ந்து […]

சென்னையில் சொத்துக்களின் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

நவீன தொழில்நுட்ப காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் லட்சம் முதல் பல கோடி வரையில் சாதாரணமாக விலைக்கு கிடைக்கின்றன. கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள கட்டுமானர்கள் ஆயிரக்கணக்கான வீடுகளை வானளவில் கட்டி விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கட்டுமான தொழில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு வரை நிலையாக இருந்த நிலையில் தற்போது கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

கட்டுமான மூலப்பொருட்களின் விலை அனைத்தும் பல மடங்கு உயர்ந்து விட்டதால் சென்னை உள்ளிட்ட எல்லா நகரங்களிலும் அடுக்குமாடி வீடுகள் விலை உயர்ந்து விட்டன. சென்னையில் கடந்த ஆண்டில் அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணி வேகமாக நடந்து இத்தொழில் அபரித வளர்ச்சியை எட்டியுள்ளது. சிமெண்ட், கம்பி, மணல், செங்கல், ஜல்லி, எலெக்ட்ரிக்கல் பொருட்கள், குடிநீர் குழாய் பைப்புகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதுதவிர கட்டுமான தொழிலாளர்களின் கூலியும் அதிகரித்ததால் வீடுகளின் விலை உயர்ந்தது. இதன் காரணமாக சென்னையில் சொத்துக்களின் விலை 10 முதல் 20 சதவிகிதம் வரை உயர்ந்து உள்ளது. மேலும் அதிகரித்து வரும் கட்டுமான மூலப்பொருட்களின் விலையால் சொத்துக்களின் மதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu