சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரி உயர்த்தியது செல்லும்- உயர்நீதிமன்றம் 

December 27, 2022

சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரி உயர்த்தியது செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகள் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30-ந்தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையையும், மாநகராட்சி தீர்மானத்தையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அப்போது நீதிபதி, நாட்டின் பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைப்படி சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு […]

சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரி உயர்த்தியது செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகள் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30-ந்தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையையும், மாநகராட்சி தீர்மானத்தையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அப்போது நீதிபதி, நாட்டின் பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைப்படி சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்ததில் எந்த தவறும் இல்லை என்றார்.

மேலும், இந்த அரசாணையின் அடிப்படையில், கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. எனவே சொத்து வரி அரசாணையும், மாநகராட்சி தீர்மானங்களும் செல்லும். 2023-24ம் ஆண்டின் முதல் அரையாண்டு முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்த வேண்டும். சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெற ஏதுவாக மாநகராட்சிகள், தங்கள் இணையதளங்களை மேம்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu