ஒடிசா சட்டசபையினை கலைக்க பரிந்துரை

ஒடிசா சட்டசபையை கலைக்க ஆளுநருக்கு மந்திரி சபை பரிந்துரை செய்துள்ளது. ஒடிசாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி நவீன் பட்நாயக் தலைமையில் ஆன அரசு அமைக்கப்பட்டது. இங்கு நவீன் பட்நாயக் 2000 ஆண்டில் இருந்து ஒடிசா மாநில முதல்வராக இருந்து வருகிறார். அம்மாநிலத்தில் கடந்த மே 13ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற்றது. இதில் சட்டசபையை கலைக்க கவர்னருக்கு […]

ஒடிசா சட்டசபையை கலைக்க ஆளுநருக்கு மந்திரி சபை பரிந்துரை செய்துள்ளது.

ஒடிசாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி நவீன் பட்நாயக் தலைமையில் ஆன அரசு அமைக்கப்பட்டது. இங்கு நவீன் பட்நாயக் 2000 ஆண்டில் இருந்து ஒடிசா மாநில முதல்வராக இருந்து வருகிறார். அம்மாநிலத்தில் கடந்த மே 13ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற்றது. இதில் சட்டசபையை கலைக்க கவர்னருக்கு அம்மாநில மந்திரி சபை பரிந்துரை செய்துள்ளது. மேலும் பிஜு ஜனதா தளம் அரசின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் சட்டசபை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் படி தேர்தல் முடிவுக்கு பிறகு சட்டசபையை கலைக்க மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu