பில் டெஸ்க் நிறுவனத்தை கையகப்படுத்தும் பே யூ நிறுவனத்தின் திட்டம் கைவிடப்பட்டுள்ளது

October 3, 2022

புரோசஸ் (Prosus) என்ற தென்னாப்பிரிக்க நிறுவனத்திற்குச் சொந்தமாக, இந்தியாவில், பே யூ (Pay U) என்ற கட்டண, பணப்பரிவர்த்தனை இயங்கு தளம் செயல்பட்டு வருகிறது. இந்த பே யூ நிறுவனத்தில், இந்தியாவின் மற்றொரு கட்டண இயங்கு தளமான பில் டெஸ்க் (Bill Desk) நிறுவனத்தை இணைப்பதற்கு புரோசஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக, தனது அதிகாரப்பூர்வ வலைப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், புரோசஸ் நிறுவனம், சுமார் 4.7 […]

புரோசஸ் (Prosus) என்ற தென்னாப்பிரிக்க நிறுவனத்திற்குச் சொந்தமாக, இந்தியாவில், பே யூ (Pay U) என்ற கட்டண, பணப்பரிவர்த்தனை இயங்கு தளம் செயல்பட்டு வருகிறது. இந்த பே யூ நிறுவனத்தில், இந்தியாவின் மற்றொரு கட்டண இயங்கு தளமான பில் டெஸ்க் (Bill Desk) நிறுவனத்தை இணைப்பதற்கு புரோசஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக, தனது அதிகாரப்பூர்வ வலைப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், புரோசஸ் நிறுவனம், சுமார் 4.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் பில் டெஸ்க் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளதாக அறிவித்தது. மேலும், பில் டெஸ்க் நிறுவனத்தை புரோசஸ் நிறுவனத்தின் பே யூ நிறுவனத்துடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தது. இந்த கையகப்படுத்துதல் தொகை, கடந்த 2018ல் நடந்த வால்மார்ட் - பிளிப்கார்ட் இணைப்பு தொகைக்கு அடுத்ததாக இருந்ததால், இந்த நிறுவனங்களின் இணைப்பு மிகுந்த கவனம் பெற்றது. அத்துடன், இந்த இணைப்பு ஏற்பட்டால், புரோசஸ் நிறுவனம், தனது போட்டி நிறுவனமான ரேசர் பே (Razor Pay) -ன் இருமடங்கு வருவாயை ஈட்டும் என்று துறைசார் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில், இந்த நிறுவனங்களின் இணைப்பு குறித்த போதிய தகவல்களை சமர்ப்பிக்க கோரி, காம்படிஷன் கவுன்சில் ஆப் இந்தியா விண்ணப்பத்தை நிராகரித்தது. அதன் பிறகு, கடந்த ஏப்ரல் மாதத்தில், நிறுவனங்கள் இணைப்பு குறித்த மறு ஆய்வறிக்கையை, புரோசஸ் நிறுவனம் CCI ல் சமர்பித்தது. நிறுவனத்தின் அறிக்கைகளை சரி பார்த்த பின்னர், செப்டம்பர் 6ஆம் தேதி நிறுவனங்கள் இணைப்பிற்கு சிசிஐ ஒப்புதல் வழங்கியது. ஆனால், தற்போது, இந்த நிறுவனங்களின் இணைப்பை கைவிட்டுள்ளதாக புரோசஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, புரோசஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர் பிரிவு தலைவர் இயான் ரேயான் (Eoin Ryan) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: "நிறுவனத்தின் இணைப்பு தொடர்பாக வழங்கப்பட வேண்டிய பல்வேறு ஒப்புதல்களுக்கு, கால தாமதம் ஏற்பட்டதால், இந்த இணைப்பு திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதில் சிசிஐயின் ஒப்புதலும் உள்ளடங்கும். பல்வேறு ஒப்புதல்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் செயல்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்காததால், நிறுவனங்களின் இணைப்பு நிகழ வாய்ப்பில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu