டெல்லி ஜந்தர்மந்தரில் மத்திய அரசுக்கு எதிராக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள முதல் மந்திரி பினராய் விஜயன் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இன்று மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் கேரள மாநில மந்திரிகள், எம்எல்ஏக்கள் ஆகியோரும், ஆம் ஆத்மி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதில் மத்திய அரசு கேரளாவிற்கு பாரபட்சம் காட்டுவதாக பினராய் விஜயன் போராட்டத்தின் போது குற்றம் சாட்டினார். நேற்று மத்திய அரசை கண்டித்து கர்நாடகா முதல் மந்திரி சித்தராமையா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.