முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோட்டில் ஆஜர் படுத்தப்பட்டாார். அங்கு அவரை 14 நாட்கள் வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதனை அடுத்து இவரை மகேந்திரபுரத்தில் உள்ள ஜெயிலில் அடைத்துள்ளனர். அவருக்கு 7691 கைதி எண்ணாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இங்கே அவருக்கு வீட்டு உணவு வழங்கவும், தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திர முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறியல்களில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.