பலுசிஸ்தானில் மக்கள் சாலைகளில் போராட்டம்

February 17, 2024

பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் மக்கள் மின்சார தடை மற்றும் சாலைகள் மூடப்படுதல் ஆகியவற்றை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் முக்கியசாலைகள் அறிவிப்பு இல்லாமல் மூடப்படுகிறது. காலவரையின்றி மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதனை எதிர்த்து அங்குள்ள கரன் மற்றும் வாசினி பகுதி மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். ஜோஸின் பகுதியை சேர்ந்த மக்கள் தேர்தல் நேரத்தில் மூடப்பட்ட சாலைகளை திறக்குமாறு உதவி ஆணையருக்கு கடிதம் அனுப்பினர். தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டிருந்த சாலைகள் இன்னும் […]

பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் மக்கள் மின்சார தடை மற்றும் சாலைகள் மூடப்படுதல் ஆகியவற்றை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் முக்கியசாலைகள் அறிவிப்பு இல்லாமல் மூடப்படுகிறது. காலவரையின்றி மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதனை எதிர்த்து அங்குள்ள கரன் மற்றும் வாசினி பகுதி மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். ஜோஸின் பகுதியை சேர்ந்த மக்கள் தேர்தல் நேரத்தில் மூடப்பட்ட சாலைகளை திறக்குமாறு உதவி ஆணையருக்கு கடிதம் அனுப்பினர். தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டிருந்த சாலைகள் இன்னும் அப்படியே உள்ளது. இதனால் மக்கள் இடையூறுகளை எதிர்கொள்வதாக கூறினர். பலுசிஸ்தான் நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியில் மக்கள் 12 முதல் 18 மணி நேர மின்வெட்டை எதிர்கொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.

அதோடு கில்கித் பாலடிஸ்டன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போன்ற பகுதிகளில் மின்வெட்டு காலவரையின்றி மேற்கொள்ளப்படுகிறது என்றும் இது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu