தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு

March 11, 2023

தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் பொதுத்தேர்வு தொடங்குகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 14-ந்தேதி தொடங்குகிறது. இத்தேர்வை 16.25 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள 3,225 மையங்களில் தேர்வு எழுதுவதற்கு தேவையான ஏற்பாடுகளை கல்வி அதிகாரிகள் செய்துள்ளனர். தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுதி முடியும் வரை அந்த பகுதியில் […]

தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் பொதுத்தேர்வு தொடங்குகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 14-ந்தேதி தொடங்குகிறது. இத்தேர்வை 16.25 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள 3,225 மையங்களில் தேர்வு எழுதுவதற்கு தேவையான ஏற்பாடுகளை கல்வி அதிகாரிகள் செய்துள்ளனர்.

தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுதி முடியும் வரை அந்த பகுதியில் மின்சாரம் தடை இல்லாமல் வினியோகிக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும். மேலும் கழிவறை, தூய்மை பணி, போதுமான அளவு பணியாளர்கள், வினாத்தாள் மற்றும் விடைத்தாள் போன்றவற்றை ரகசியமாக கொண்டு வர தேவையான அளவு வாகனங்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு ஆகியவற்றை விரிவாக மேற்கொள்ள வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu