ஜியாா்ஜியா விடுதியில் விஷவாயு கசிவு - 11 இந்தியர்கள் பலி

December 18, 2024

ஜார்ஜியாவின் குடௌரி மலைப்பிரதேசத்தில் உள்ள விடுதியில் விஷவாயு தாக்கி 11 இந்தியர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. முதல்கட்ட விசாரணையில் ‘கார்பன் மொனாக்சைடு’ கசிவு காரணமாக 12 பேர் உயிரிழந்ததாகவும், அதில் 11 பேர் இந்தியர்கள் என்றும் ஜார்ஜியாவின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்திய தூதரகம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் இரங்கல்களை தெரிவித்து, சம்பவம் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் தகவல் பரிமாற்றம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்படும் என உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜார்ஜியா […]

ஜார்ஜியாவின் குடௌரி மலைப்பிரதேசத்தில் உள்ள விடுதியில் விஷவாயு தாக்கி 11 இந்தியர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

முதல்கட்ட விசாரணையில் ‘கார்பன் மொனாக்சைடு’ கசிவு காரணமாக 12 பேர் உயிரிழந்ததாகவும், அதில் 11 பேர் இந்தியர்கள் என்றும் ஜார்ஜியாவின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்திய தூதரகம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் இரங்கல்களை தெரிவித்து, சம்பவம் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் தகவல் பரிமாற்றம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்படும் என உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜார்ஜியா காவல் துறை விசாரணை நடத்தியது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு விடுதியில் மின் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதை தொடர்ந்து விஷவாயு கசிந்திருக்கும் என்றும் உயிரிழப்புகளுக்கான காரணம் தடயவியல் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu