நடப்பு நிதியாண்டில் இந்திய அரசுக்கு 15000 கோடி ரூபாய் பணத்தை ஈவுத் தொகையாக வழங்க பொதுத்துறை வங்கிகள் தீர்மானித்துள்ளன.
நடப்பு நிதி ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், 98000 கோடி ரூபாய் லாபம் ஈட்டப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளின் மொத்த லாபம் இதுவாகும். மேலும், கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், 1.05 லட்சம் கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டப்பட்டது. அப்போது, 13804 கோடி அரசாங்கத்துக்கு ஈவுத்தொகையாக வழங்கப்பட்டது. எனவே, இந்த முறை, 15000 கோடி ரூபாய் வழங்க பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முக்கிய காரணமாக, வங்கிகளின் என்பிஏ விகிதம் 6% அளவுக்கு குறைவாக உள்ள வங்கிகளும் ஈவுத்தொகையை அறிவிக்க மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது அமைந்துள்ளது.