தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியுடன் புதிய வாக்காளர் பட்டியலை தகுதியேற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்கள் கடந்த நவம்பர் 16, 17, 23, 24 ஆகிய நாட்களில் தமிழகம் முழுவதும் நடைபெற்றன. இதில், மொத்தம் 23 லட்சத்து 9 ஆயிரத்து 391 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இறுதியாக, தமிழகத்தில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். இதில் 3.11 கோடி ஆண், 3.24 கோடி பெண், 9,120 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். 1.76 லட்சம் முதல் 6.91 லட்சம் வரை வாக்காளர்களை கொண்ட தொகுதிகள் உள்ளன. புதிய வாக்காளர்களுக்கு ஜனவரி 25-ந்தேதி முதல் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.