தமிழக அரசு ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை நேற்று முதல் தொடங்கி வைத்துள்ளது.
தமிழக அரசு ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை நேற்று முதல் தொடங்கி வைத்துள்ளது. அதன்படி கட்டிட அனுமதி பெற www.onlineeppa.tb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் அனுமதிக்கான கால அளவு ஐந்து ஆண்டுகளாகவும், அதில் கட்டிட விதிமீறல்கள் எதுவும் இருக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று கட்டிட வரைபட அனுமதி அனுப்பப்படும் நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் மட்டுமே இந்த திட்டமானது செல்லுபடி ஆகும். மேலும் அனுமதி பெறப்படும் நிலம் விவசாய நிலமாக அல்லது நிறுவனத்திற்கு சொந்தமானதாக, திறந்தவெளி பகுதியாக, கேளிக்கை பயன்பாட்டு பகுதியாக அல்லது சாலைக்கு ஒதுக்குப்புறமாக இருந்தால் அனுமதி உத்தரவு தானாக ரத்து செய்யப்படும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கட்டிடங்கள் கட்டிட விதிகளின்படி கட்டப்பட வேண்டும் அனுமதி பெற்ற பின் கட்டிடம் கட்டும்போது விதிமீறல் ஏதேனும் ஈடுபட்டால் அவை சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆவணங்கள் தவறாக இருப்பது கண்டறியப்பட்டால் உரிய தண்டனை விதைக்கப்படும். மேலும் விண்ணப்பத்தில் காட்டப்பட்டுள்ள கட்டட வடிவமைப்பு,அடித்தளம் உள்ளிட்டவை சரியாக உரிய விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும். தெருக்களில் கட்டுமான பொருட்கள், கழிவுகளை கொட்ட கூடாது. மேலும் கட்டுமான பணிகள் முடிந்த 30 நாட்களுக்குள் சொத்துவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன














