இன்று தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டம் துவக்கம்

September 5, 2022

தமிழகத்தில் கல்லுாரி மாணவியருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் 'புதுமைப்பெண்' திட்டம் இன்று துவக்கப்படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் மகளிர் திருமண உதவித்திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் 'தாலிக்கு தங்கம்' திட்டமாக மாற்றப்பட்டது. தற்போது இத்திட்டம் ரத்து செய்யப்பட்டு பள்ளி படிப்புக்கு பின் உயர்கல்வி கற்கும் மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து முடித்து […]

தமிழகத்தில் கல்லுாரி மாணவியருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் 'புதுமைப்பெண்' திட்டம் இன்று துவக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் மகளிர் திருமண உதவித்திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் 'தாலிக்கு தங்கம்' திட்டமாக மாற்றப்பட்டது. தற்போது இத்திட்டம் ரத்து செய்யப்பட்டு பள்ளி படிப்புக்கு பின் உயர்கல்வி கற்கும் மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கு மட்டும் மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு புதுமைப்பெண் திட்டம் தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

நடப்பு கல்வி ஆண்டில் இளநிலை படிப்பில் இரண்டு, மூன்றாம் ஆண்டு மாணவியர்கள் 2.5 லட்சம் உதவித்தொகை கோரி பதிவு செய்துள்ளனர். அவர்களில் முதற்கட்டமாக 60 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

கடந்த ஆட்சியில், தமிழகத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில் 32 பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக மாற்றப்பட்டன. இந்த பள்ளிகள், தற்போதைய தி.மு.க., ஆட்சியில் தகைசால் மற்றும் மாதிரி பள்ளிகள் என பெயர் மாற்றப்பட்டுள்ளன. டில்லியில் செயல்படும் அரசு மாதிரி பள்ளிகளை பின்பற்றி அந்த மாடலில் வகுப்புகளை நடத்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 41 பள்ளிகள் 'டில்லி மாடல்' பள்ளிகளாக செயல்பட உள்ளன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மாடல் பள்ளி திட்டங்களை துவங்கி வைக்கிறார்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu