புதுச்சேரியில் 1-8ம் வகுப்புக்கு வைரஸ் காய்ச்சல் காரணமாக வரும் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் அதிகளவில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் 26-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவிற்கான அரசாணை அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளி கல்வித்துறை மூலமாக அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்தார்.