ஞானவாபி மசூதியின் பாதாளறையில் இந்துக்கள் பூஜை செய்வதற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதன் அருகில் ஞானவாபி மசூதி இருக்கின்றது. இந்த மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட ஐந்து இந்து பெண்கள் வாரணாசி கோட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இதனை அடுத்து வாரணாசி கோர்ட் மசூதிக்குள் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டிருந்தது. பின்னர் ஆய்வில் மசூதி வளாகத்தில் சிவலிங்கம் இருப்பது தெரிய வந்தது. ஆனால் அது நீரூற்று பகுதி என்றும் தொழுகைக்கு வருபவர்கள் கை, கால்கள் கழுவதற்காக அதில் நீர் நிரப்பப்பட்டுள்ளது என்றும் மசூதி நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மசூதி வளாகத்தின் தரைத்தளத்தில் இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதன் பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் மசூதி குழு மேல்முறையீடு செய்திருந்தது. இவ்வழக்கில் இந்துக்கள் பூஜை செய்வதற்கு இடைக்கால தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.